டவுசரை கழட்ட வேண்டிய நேரம் வந்தாச்சி...வில்லங்கமா யோசிக்காதீங்க!, அடுத்து என்னன்னு கடைசி வரில சொல்றேன்.வழிதவறி பதிவுலகம் பக்கமா வந்து ஆறு வருசம் ஓடிப் போச்சு, நானும் ரவுடிதான்...நானும் ரவுடிதான்னு வருசத்துக்கு ஒரு பேரோட ரவுண்ட் வந்தாச்சு.
நான் உள்ள வந்தப்ப தீவிரமா இயங்கிட்டு இருந்த பலரை இன்னைக்கு காணோம்.விரல் விட்டு எண்ணிவிடக் கூடியவர்கள் மட்டுமே இப்ப இயங்கீட்டு இருக்காங்க...அதுல நம்மளும் ஒருத்தன்னு நெனைக்கும் போது..ம்ம்ம்ம்...அட கண்ணுல தண்ணி(இதான் நமக்கு நாமே திட்டம்..ஹி..ஹி).இங்கே எனக்கு தனிப்பட்ட நண்பர்கள் எவரும் இல்லை.எதிரிகளும் இல்லை....ஆனால் நட்பு கொண்டாடியிருக்கிறேன், எதிர் கூச்சல் இட்டு கோவத்தை காட்டியிருக்கிறேன்.
கடந்து போன இந்த வருடம், தனிப்பட்ட முறையில். தொழில் ரீதியாக நான் மரண அடி வாங்கிய ஆண்டு. அநேகமாய் தெருவுக்கு வந்த ஆண்டு என்றே சொல்லலாம்.மீண்டு விட முடியுமென்றாலும், வலிகளின் தீவிரம் தணித்த காரணிகளில் பதிவுலகத்திற்கும் பங்குண்டு.
அடையாளங்களை தூக்கிப் பிடித்து என்னை மிகை மனிதனாக காட்டிக் கொள்ளாததே, இன்னமும் இங்கே நிலைத்திருக்க காரணமாயிருக்கலாம்.விருப்பு வெறுப்பில்லாது வேடிக்கை பார்க்கிறவனாய் மட்டுமே இருந்ததினால் நிறைய கற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது.சலிப்புகள் வராமல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்....
சதயம், பங்காளி,இரண்டாம் சொக்கன், யட்சன் வரிசையில் இனி டவுசர்பாண்டியும் எனது பதிவுலக சுவடுகளில் ஒன்றாயிருக்கும்.புதிய அவதாரங்கள் தொடரும்....பகவான் மட்டும்தான் அவதாரமெடுக்க முடியுமா என்ன?
எழுத வேண்டியது நிறைய இருக்கிறது....பிரபல பதிவராகாவிட்டாலும், அனைவருக்கும் பிடித்த பதிவராகவாவது இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.....
அதுனால...
டவுசரை கழட்டீட்டு வேட்டிய மடிச்சு கட்டீட்டு வேறோரு பெயர்ல விரைவில் எழுத ஆரம்பிக்கிறேன்... :))