Tuesday, January 12, 2010

ஜென் கதைகள்....

ஜென் கதைகள் நாள்பட்ட ஒயின் போன்றது. அது தரும் கிறக்கமும், நெகிழ்வும் அனுபவித்தால் மட்டுமே அறிய முடியும். பின் வரும் இனைப்பில் நிறையவே கதைகள் இருக்கிறது. அனுபவித்துப் பாருங்களேன்.....

http://www.rathinagiri.in/2008-02-10-13-37-12/2008-05-21-17-59-01.html

Friday, January 1, 2010

அல்வா கொடுக்க நினைச்சா....ஹி...ஹி...

பதிவெழுத பெரிதாய் ஆர்வம் இல்லாத காரணமே இந்த இடைவெளி....படிப்பவர்களுக்காய் எழுதிய நாட்கள் போய் எண்ணங்களை எழுத்தாய் மொழிபெயர்க்கும் வித்தையின் நுட்பம் பழகவே இந்த பதிவினை உருவாக்கினேன். ஆனால் இதுவரை அதற்கான முயற்சியெதையும் செய்யவில்லை என்பதே உண்மை.

நேற்றைக்கு எதையோ தேடிக் கொண்டிருந்த போது இந்த ஒலிகோப்பு சிக்கியது. அமெரிக்காவில் பிழைக்கப் போன ஒரு இந்திய தம்பதி சம்பந்தப்பட்டது. காதலாகி கசிந்து கல்யாணம் கட்டிக் கொள்ளாமல் குடும்பங்களின் கூட்டனி இம்சையால் கல்யாணித்துக் கொண்டவர்கள் போலிருக்கிறது.



கணவணின் நடவடிக்கைகளில் சந்தேகப்பட்ட திருமதி, கணவனின் களவாணித் தனத்தினை எப்படி துப்பறிகிறார் என்பதை பற்றியதே இந்த ஒலிக்கோப்பு. இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்குமென்கிற நல்லெண்ணத்திலேயே பகிர்ந்து கொள்கிறேன். அதாவது...நண்பர்களே நீங்கள் யாரும் அசட்டுத் தனமாய் இம்மாதிரி மாட்டிக் கொள்ள கூடாதென்கிற நல்லெண்ணத்தில்....

Tuesday, December 15, 2009

மனசு விட்டு சிரிக்கலாமே....



எத்தனை நாளைக்குத்தான் கவுண்டரையும், வடிவேலையுமே பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது. இங்கே ஒரு திருமண நிகழ்வு...

பார்த்து மகிழுங்கள்....

Thursday, November 26, 2009

ஏழுமலையானின் நிஜ முகம்....!

திருப்பதி ஏழுமலையானை, சர்வ அலங்காரனாய் பார்த்தவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, 1970 களில் எடுக்கப் பட்டதாக கருதப்படும் இந்த வீடியோ கிளிப்பில், ஏழுமலையான் எந்த அலங்காரமும் இல்லாமல் அபிடேகதாரியாய் காட்சியளிக்கிறார்.

திருமலை மூலவர் விக்கிரகம் குறித்த சர்ச்சைகளின் காரணமாய் அவர் முழு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்டப்படுகிறார் என்கிற சர்ச்சை பன்னெடுங் காலமாய் இருந்து வருகிறது. ஒரு பதிவர் கூட இது குறித்து ஒரு பதிவு எழுதியிருந்ததாய் நினைவு...






http://www.youtube.com/watch?v=ybLBma5KwEo&feature=related

Saturday, November 21, 2009

தனிமையின் இசை...!



இருள் தரும் அடர்த்தி

ஒற்றை வயலின் மறைக்கும் சோகம்

இறுக்கம் நெகிழ்த்தும் தாளகட்டு

நேர்த்தியான சித்திரம் அசைவதை போல....

தொலைத்துவிட்ட தருணங்களை நினைத்து

அழுகலாம்தான்...ம்ம்ம்ம்

பொறுங்கள்....

இன்னமொறு தடவை கேட்டுவிட்டு வருகிறேன்.




In The Mood of Love என்கிற ஆங்கிலபடத்தில் வரும் இசைகோர்வையிது