Monday, May 31, 2010

நர்சிம், சந்தனமுல்லை தொடர்பான வினவின் பதிவிலிட்ட பின்னூட்டம்

இந்த பதிவினை படித்த வரையில்,பிரச்சினையை துவக்கியது நர்சிம் இல்லை என்பது மட்டும் புரிகிறது. இதுல எதுக்கு அவன் பருப்பு, இவங்க பித்தளைன்னு கலர் பூசூறீங்கன்னு தெரியலை....

உங்களுக்கு பார்ப்பனர்களை திட்ட ஒரு வாய்ப்பு, அதை செம்மையாய் செய்ய சந்தன முல்லை என்கிற பிற்படுத்தப்பட்ட சமூக பெண்மணி கையில் கிடைத்திருக்கிறார். வன்புணர்ச்சி, வெங்காயம்னு....நரசிம்மை போட்டுத் தாக்குவதாய் நினைத்துக் கொண்டு சந்தனமுல்லையினை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறீர்கள்.

இந்த கேப்பில் இடது சாரி இம்சையை வேறு கடை விரித்திருக்கிறீர்கள்.கார்க்கி,அபி அப்பா, லதானந்த், மங்களூர் சிவா இவர்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது கூட வன்புணர்ச்சிதான்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இங்கே நீங்கள் உட்பட எவனும் யோக்கியனில்லை. சுதந்திரவெளி...கருத்து கந்தசாமியாய் தீர்ப்புச் சொல்லி மற்றவனை காயடிக்க துடிக்கும் கருத்துச் சுதந்திரதை உங்களுக்கு எது தந்ததோ அதே சுதந்திரம் நர்சிம் மற்றும் பிறருக்கு உண்டு.

.வம்புச் சண்டைக்குப் போகக் கூடாது, அதே நேரத்துல வந்த சண்டைய விடக் கூடாது....அதுதான் இங்கே நடந்திருக்கிறது. கத்தியை தூக்கும் போதே கத்தியால் இறக்க தயாராக இருக்க வேண்டும்.

போய் அம்மாவிடமும், அய்யாவிடமும் குண்டியை சொறிந்து கொண்டு பதவிக்காக நிற்கும் உங்கள் தோழர்களை புத்தி சொல்லி அழைத்துவாருங்கள்....அதை விடுத்து இம்மாதிரியான ஒளிவட்டங்களாய் நீங்கள் போதிப்பது உங்களின் அம்மணத்தையே வெளிச்சமாக்குகிறது.

Sunday, May 9, 2010

இதுதான் குறும்படம்.....



தமிழில் குறும்பட இயக்கம் பெரிய அளவில் வளராததன் காரணம், வருமான வாய்ப்பு இல்லாததுதான் என நினைக்கிறேன். நான் பார்த்த சில தமிழ் குறும்படஙகள், இனி தமிழில் குறும்படங்களே பார்க்கக் கூடாது என்கிற நினைப்பினை தந்தன என்றால் மிகையில்லை. உதாரணத்திற்கு பதிவர் உண்மைத் தமிழனின் படத்தினைச் சொல்லலாம்.

கருத்தாக்கம், காட்சிகளை பிரித்தல், துல்லியமான படத் தொகுப்பு இருந்தால் மட்டுமே சுவாரசியம் தரக்கூடியவை குறும்படங்கள். சமீபத்தில் பார்த்த ஒரு குறும்படம் தான் மேலே நீங்கள் பார்ப்பது. வசனம் எதுவுமே இல்லை,ஆனால் காட்சிகளை திட்டமிட்டதும், தொகுத்ததும்தான் இந்த படத்தின் சிறப்பாய் நினைக்கிறேன். குறும் படமெடுக்க ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் இது.

Thursday, May 6, 2010

நேற்றிரவு கடவுளிடம் பேசிக் கொண்டிருந்த போது....

எழுதாமலே இருப்பது கூட சுகமாய்த்தான் இருக்கிறது. மெனெக்கெட்டு எழுதுவதை விட தோன்றும் போது எழுதுவதின் பின்னால் எப்போதும் ஒரு நேர்மை இருக்கும்.

எழுதாவிட்டாலும் கூட மெனக்கெட்டு பதிவுலகின் எல்லா எல்லைகளிலும் வாசிக்கிறேன், வாசித்த பின்னர் ஒரு விதமான அயற்சியே எஞ்சுகிறது.புகழ் வெளிச்சம் எனக்கு அலுத்துவிட்டதால் கூட அப்படி தோன்றலாம்.

தன்னை மட்டுமே முன்னிறுத்தி எழுதும் எழுத்துக்களை அதிக நாட்களுக்கு எழுத முடியாது. சரக்கு தீர்ந்த பின்னால் பொய் சொல்லியோ, மிகையாகவோ எழுதலாம்...ஒரு கட்டத்தில் இந்த மாதிரி எழுத்தும் களைப்பையே தரும். சொந்த அனுபவம்....ம்ம்ம்ம்ம்

மயங்கும் கண்ணை பாராமல்
கலங்கும் நெஞ்சை கேளாமல்
பிரிந்து செல்ல எண்ணாதே
என் கண்ணீர் பேசும் மறவாதே.....

இப்போது கேட்டுக் கொண்டிருக்கும் வரிகள் இவை.....நானே வருவேன் என்கிற அமரத்துவம் வாய்ந்த பாடலின் வரிகள்....நாயகியின் சோகம் காதலிக்காதவனையும் காதலிக்க வைக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் Jack Nicholson நடித்த Something's Gotta Give படத்தினை பார்த்தேன், எத்தனையாவது முறையாக பார்க்கிறேன் என்று நினைவில்லை, ஆனால் எத்தனை முறை பார்த்தாலும் புதிதாய் தெரியும் படம் இது....விமர்சனமெல்லாம் எழுதி உங்களை கலவரப் படுத்தப் போவதில்லை.

கொஞ்சம் விவகாரமான கதை, அறுபத்தி மூன்று வயது ’ப்ளேபாய்’ ஜேக் நிக்கல்சன் தனது 20 வயது காதலியின் அம்மாவை எக்குத் தப்பான ஒரு சூழ்நிலையில் சந்திக்கிறார், சில பல தொடர் நிகழ்வுகளில் காதலியின் அம்மாவை கவர்கிறார். இந்த காதலுக்கு குறுக்கே கொஞ்ச வயசு டாக்டர் ஒருவர் வேறு வருகிறார். இந்த காதல் என்ன ஆனது என்பதை கலந்து கட்டி சுவாரசியமாய் சொல்லியிருக்கின்றனர். முடிந்தால் பார்த்து விடுங்கள்.....

காதல் என்பது கத்தி மேல் நடப்பது மாதிரியானது, தவறான ஒரு தப்படி கூட எல்லா சந்தோஷங்களையும் சாப்பிட்டு விடும். இதைப் பற்றி தனியாய் நீளமாய் ஒரு பதிவு எழுத வேண்டுமென ஐந்தாறு வருடஙக்ளாய் நினைத்து மட்டும் கொண்டிருக்கிறேன்.

இலங்கைப் பிரச்சினைகளைப் பற்றி எதுவும் எழுதுவதில்லை என தீர்மானமாய் இருந்தேன், ஆனால் சமீபத்தில் பிரபாகரனின் மூத்த சகோதரரின் பேட்டியினை படித்த பின்னர் தோன்றியது இதுதான்..... குழப்பமான ஐம்பதுகளில் இருக்கும் ஒரு மனிதனின் வாக்குமூலம் மாதிரித்தான் இருந்தது.கடவுளை நம்புகிறார், தம்பியை நேதாஜிக்கு இனையாக அடிக்கடி சொல்லியிருக்கிறார். அலைக்கழிக்கப் படும் தனது தாயாரைக் குறித்த துடிப்பு எதையும் கானோம்.ம்ம்ம்ம்ம்ம்

இத்தனை தூரம் எழுதிய பின்னர் என்ன தலைப்பு வைப்பது என புரியவில்லை. எதற்கும் “நேற்றிரவு கடவுளிடம் பேசிக் கொண்டிருந்த போது” என வைத்து விடுகிறேன்.

எனது மரியாதைக்குறிய தோழியும், எனது அருமை தெலுங்கு வாத்தியாருமான(நாளை பின்னே இதைப் படிச்சா சந்தோஷப் படுவார் :)) அந்த பதிவர் உடல் நலம் பாதிக்கப் பட்டிருக்கிறார். விரைவில் நலம் பெற வேண்டுகிறேன். நான் தெலுங்கு படித்த கதையினை அவர் விரைவில் நலம் பெற்று வந்து பதிவாய் இடவேண்டுமென எல்லாம் வல்ல மகர நெடுங்குழைக்காதனை வேண்டுகிறேன்.