Thursday, October 29, 2009

ராஜ ராஜ சோழருக்கு இன்னிக்கு பிறந்த நாள்....


ஐப்பசி சதய நட்சத்திர தினத்தில் பிறந்த சோழ சக்கரவர்த்தி ராச ராச சோழனுக்கு இன்றைக்கு (29-10-09)பிறந்த நாள். மேலே காண்பது அவரின் சிலையும் , அரிய சித்திரமும்.

Sunday, October 25, 2009

இஸ்லாம் - தமிழ் : ஒரு வரலாற்றுப் பார்வை -2


கீழேயுள்ள இனைப்பினை சொடுக்கி முதல் பாகத்தினை படித்த பின்னர் இந்த பதிவினை தொடர வேண்டுகிறேன்.

இஸ்லாம் - தமிழ் : ஒரு வரலாற்றுப் பார்வை -1

முந்தைய பதிவில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வகைகளை பற்றிய அறிமுகத்துடன் , மஸலா வகை இலக்கியம் தொடர்பான தகவல்களை படித்திருப்பீர்கள். தொடர்ச்சியாய் இந்த பதிவில் ”கிஸ்ஸா” வகை இலக்கியம் பற்றி நான் அறிந்தவைகளை தருகிறேன்.

‘கஸஸ்' என்கிற அரபிச்சொல்லின் நீட்சிதான் இந்த கிஸ்ஸா, 'கதை கேட்டல்' என்கிற அர்த்தம் தரும் சொல் இது. கதை கேட்பதென்பது மனித இனத்தின் மிக சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று, இன்றைய நவீனங்களின் வளர்ச்சியில் கதை கேட்டலின் முறை மாறியிருந்தாலும், இந்த நுட்பத்தின் மீதான ஆவலும், ஆச்சர்யமும் மாறாது இன்றைக்கும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

இஸ்லாமிய வரலாற்று போக்கின் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டவைதான் இந்த கிஸ்ஸா இலக்கிய வகை....கேட்போரை தன்பால் கட்டியிழுத்து மார்க நெறிகளையும் அதன் மான்புகளையும் கேட்போர் மனதில் பொதிந்து வைக்க இவ்வகை இலக்கியங்கள் பயன் பட்டன என்றால் மிகையில்ல்லை. முந்தைய மஸலா இலக்கிய வகையினை விட பெரிதும் விரும்பப்பட்ட இலக்கிய வகையாக இதை சொல்லலாம்.

கிஸ்ஸா வகை இலக்கியங்களுக்கு என தனியான தெளிவான வரையறைகள் ஏதுமில்லை. அவை செய்யுள் வடிவிலும், உரை நடையாகவும், இவையிரண்டும் கலந்தும் காணப்படுகின்றன. தமிழில் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட கிஸ்ஸா இலக்கியங்கள் இருப்பதாக தெரிகிறது. இவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங்களை அடிபப்டையாக கொண்டவையாகவும், மற்றவை வரலாற்று புனைவாக இஸ்லாத்தின் உயர் நெறிகளை முன்னிறுத்தும் வகையில் படைக்கப் பட்டிருக்கின்றன.

சில புகழ்பெற்ற கிஸ்ஸா இலக்கியங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்....

  • ஈசுபு நபி கிஸ்ஸா
  • அலி(ரலி) கிஸ்ஸா
  • இஸ்வத்தூர் நாச்சியார் கிஸ்ஸா
  • முகமது அனிபு கிஸ்ஸா
  • சைத்தூள் கிஸ்ஸா
  • ஷம்ஊன் கிஸ்ஸா
  • கபன் கள்ளன் கிஸ்ஸா


இவற்றுள் வடிவில் 'இஸ்வத்து நாச்சியார் கிஸ்ஸா' பெரியதாகவும், 'கபன் கள்ளன் கிஸ்ஸா' வடிவில் சிறிய கிஸ்ஸாவாக விளங்குகின்றன.


தமிழக முஸ்லீம்களிடையே மிகவும் புகழ் பெற்றதும், இலக்கிய செறிவு நிறைந்தது ஈசுபு நபி கிஸ்ஸாவாகும்..இதனை படைத்தவர் தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையினை சேர்ந்த மதாறு சாஹிபு புலவராவார். இந்த நூல் ஹிஜ்ரி1170 ம் ஆண்டில் இயற்றப் பட்டதாக தெரிகிறது. இந்த நூல் யாக்கூபு நபியின் மகனாக பிறந்த ஈசுபு நபியின் வரலாற்றினை கூறுகிறது.


ஈசுபு நபி கிஸ்ஸாவிற்குப் பின்னர் பெரிதான வரவேற்பினை பெற்றது சைத்தூள் கிஸ்ஸாவாகும். இது ஒரு வரலாற்று புனைவிலக்கியம் எனலாம். இதில் குறிப்பிடப்படும் வரலாற்று நிகழ்வுகளுக்கு ஆதாரம் இல்லை என்பது குறிப்பிட தக்கது. ஆனால் ஆச்சர்யகரமாய் இஸ்லாத்தின் புகழ் பெற்ற மாந்தர்களை பற்றிய குறிப்புகள் நூலின் நெடுகில் விரவியிருக்கின்றன.எளிய தமிழில் காணப்படும் இந்த நூலை இயற்றியவர் பேட்டை ஆம்பூரைச் சேர்ந்த அப்துல் காதர் சாஹிபு ஆவார்.


பதிவின் நீளம் கருதி இந்த அளவில் கிஸ்ஸா இலக்கியம் தொடர்பான தகவல்களை நிறைவு செய்கிறேன்....அடுத்த பதிவில் ”நாமா” வகை இலக்கியம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.


Wednesday, October 21, 2009

நிர்வாணம்...

அன்மையில் இனைய மேய்ச்சலில் இந்த வலைத்தளம் அகப்பட்டது. நிர்வாணத்தை ரசிக்க முடிகிறவர்கள் மட்டும் இதை பார்க்கவும்....

http://artnudes.blogspot.com/?zx=475b1c5aa140f0ea

மற்றவர்கள் கலாச்சார கூச்சலிட்டுக் கொண்டே இந்த பதிவினை விட்டு அகலலாம்.

Tuesday, October 13, 2009

ம்ம்ம்ம்ம்....

ஒன்றை நினைந்து
ஒன்றில் நிலைத்து
ஒன்றில் ஊன்றி
ஒன்றில் கரைந்து
ஒன்றாய் ஆவேனோ?
ம்ம்ம்ம்ம்

-இரண்டாய் கிடப்பவன்

தமிழ் மென்னூல்கள்

வலை மேய்ந்த பொழுதில் சிக்கிய தளமிது , பல தமிழ் மென் புத்தகங்களை திரட்டி வைத்திருக்கிறார். தரவிறக்கி பயன் படுத்திக் கொள்ளலாம்.

http://tamilebooksdownloads.blogspot.com/

Friday, October 9, 2009

புவனேஸ்வரியும் பின்னே ஞானும்....


புவனேஸ்வரியை வைத்து ஊடகங்கள் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்திருக்கும் வேளையில், எனதருமை வலையுலக கலாச்சார காவலர்கள் இந்த வாய்ப்பை பொங்கல் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

எதாவது ஒரு பிரச்சினைன்னா கருத்து சொல்றேன் பேர்வழின்னு கெளம்பிடராங்க நம்ம பதிவுலக சிகாமணிகள். கவுண்டமணி சொல்ற மாதிரி இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலை நாராயணா !

நமக்கு அப்படியெல்லாம் கருத்து சொல்ற அளவுக்கு புத்தியில்லை, ஆனா கண்ணையும் கருத்தையும் கவரும் அவங்களோட அழகான படத்தையெல்லாம் வரிசை கட்டிப் போட ஒரு வாய்ப்பா நினைச்சி போட்ருக்கேன்.

குளிர குளிர பார்த்துட்டு போய் புள்ள குட்டிகளை படிக்க வைக்கிற வழியப் பாருங்கப்பூ....

ஸென் கதை : இயல்பாயிரு !

அது ஒரு மடாலயம். அந்த மடாலயத்தில் பெரிய தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்தை சுத்தம் செய்யும் பணி ஒருவனுக்கு கிடைத்தது. அவன் அந்த தோட்டத்தை துப்புரவாக பெருக்கி, குப்பைகளை எல்லாம் ஒரு குழியிலே போட்டு வைத்திருந்தான். பசும்புற்களை வெட்டினான். செடிகளை சரியான இடத்திலே வைத்தான். தொலைவே நின்று பார்த்தான். தோட்டம் சுத்தமாக இருந்தது. வந்து குருவிடம் தோட்டம் சுத்தம் செய்து விட்டேன் என்று சொன்னான். ‘இல்லை. அங்கே பார்’ என்று சுட்டிக் காட்ட, அங்கே சில இலைகள் விழுந்து கிடந்தன. உடனே ஓடிப் போய் அந்த பழுத்த இலைகளையெல்லாம் அகற்றினான். மறுபடியும் குருவிடம் வந்து தோட்டம் சுத்தமாகி விட்டது என்று சொன்னான்.

அவர் இடது புறம் பார்த்து ‘இங்கே பார்’ என்று சொன்னார். அங்கே ஓடிப் போய் ஒரே ஒரு சுள்ளியை அப்புறப்படுத்தினான். இந்த குருவுக்கு ‘கழுகு கண் எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறார்’ என்று அலுத்துக்கொண்டான். மறுபடியும் குருவிடம் ஓடி வந்து சுத்தம் செய்து விட்டேன் என்று கூறினான். குரு எட்டிப் பார்த்துவிட்டு ‘இல்லை. தோட்டம் சுத்தமாக இல்லை’ என்று சொன்னார். ‘ஒரு குப்பைகூட இல்லையே. சுத்தமாக இருக்கிறதே’ என்று கேட்டான். ‘இல்லை. தோட்டம் நன்றாக இல்லை’ என்று சொன்னார். அவனுக்கு கோபம் வந்துவிட்டது.

‘என்ன நினைத்துகொண்டிருக்கிறாய். நீ பைத்தியக்காரனா, நான் பைத்தியக்காரனா. இவ்வளவு சுத்தம் செய்திருக்கிறேன் வேண்டுமென்றாலும் தோட்டம் நன்றாக இல்லை என்று சொல்கிறாயே’ என்று சொல்ல, குரு மறுபடியும் ‘ஆமாம். தோட்டம் நனறாக இல்லை’ என்று சொன்னார். ‘போடா’ என்று அவரைக் கண்டபடி ஏசி விட்டு குருவை விட்டுப் போனான். ‘நீயே சுத்தம் செய்துகொள்’ என்று சொன்னான்.

குரு கீழே இறங்கினார். சீடன் வியப்போடு பார்த்தான். குரு தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கீழே போய் அதை உலுக்கினார். பனித்துளிகளும், இலைகளும் விழுந்தன. இன்னொரு முறையும் உலுக்கினார். இன்னும் இலைகளும், பூக்களும் விழுந்தன. இன்னொரு செடியைப் போய் உலுக்கினார். அங்கிருந்தும் இலைகளும், பூக்களும் உதிர்ந்தன. இன்னொரு செடியைப் போய் உலுக்கினார். அங்கிருந்தும் இலைகளும், பூக்களும், பிஞ்சுகளும் உதிர்ந்தன.குரு தன்னிடத்திற்கு வந்தார். எட்டிப்பார்த்தார். ‘இப்பொழுது தோட்டம் நன்றாக இருக்கிறது’ என்றார். சிஷ்யன் திகைத்தான். மறுபடி பார்த்தான். ‘எனக்கு புரியவில்லையே’ என்று பணிவோடு கேட்டான். ‘ஒரு தோட்டம் இலைகளோடும், பூக்களோடும், பிஞ்சுகளோடும், காய்களோடும் இருப்பதே இயல்பு. மிகச் சுத்தமாக இருப்பது ஒரு தோட்டத்தின் இயல்பல்ல. இயல்பாக இரு என்று சொன்னார். சிஷ்யன் தலைக்குனிந்து இயல்பாக இருப்பதற்கு அன்றிலிருந்து முயற்சி செய்தான்.

Monday, October 5, 2009

வாங்க எல்லாரும் பணக்காரனாயிடலாம்....

எல்லோரும் பணக்காரர்களாக ஆண்டுக்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட நாளில் திரு அண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் செல்ல வேண்டும்.இந்த கிரிவலத்தின் பெயர் குபேர கிரிவலம் என நாமாக பெயர் குறிப்பிட்டுக்கொள்ளலாம்.அந்த குபேர கிரிவலம் 14.12.2009 அன்று வருகிறது.அன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை குபேர லிங்கத்தின் சன்னதியில் சாமி கும்பிடுங்க.


மேற்படி சமாச்சாரத்தை ஒரு வலைப்பூவில் படித்தேன்....பாருங்க எம்புட்டு ஈஸியா ஒரு வழியிருக்கு....

சித்தர்களுக்கான காயத்ரி மந்திரங்கள்....

ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி

ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்


ஸ்ரீதிருமூலர் சித்தரின் காயத்ரி

ஓம் ககன சித்தராய வித்மஹே
பிரகாம் சொரூபினே தீமஹி
தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்

ஸ்ரீபதஞ்சலி காயத்ரி

ஓம் சிவ தத்துவாய வித்மஹே
யோக ஆத்ராய தீமஹி
தந்நோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்

ஸ்ரீவியாக்ரபாதர் காயத்ரி

ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
ஈஸ்வரசிஸ்யா தீமஹி
தந்நோ வியாக்ரபாத ப்ரசோதயாத்

ஸ்ரீ போகர் சித்தர் காயத்ரி

ஓம் நவயாஷாவைகடாய வித்மஹே
மன்மத ரூபாய தீமஹி
தந்நோ பிரபஞ்ச சஞ்சார சீனபதிரிஷி
ப்ரசோதயாத்

ஸ்ரீகாலங்கிநாதர் சித்தர் காயத்ரி

ஓம் வாலை உபாசகாய வித்மஹே
புவனேஸ்வ்ரி சிஷ்யா தீமஹி
தந்நோ காலங்கிநாத ப்ரசோதயாத்

ஸ்ரீபுண்ணாக்கீசர் சித்தர் காயத்ரி

ஓம் ஈசத்தவாய வித்மஹே
ரண நாவாய தீமஹி
தந்நோ முக்தி புண்ணாக்கீச ப்ரசோதயாத்

ஸ்ரீசிவவாக்கியர் சித்தர் ப்ரசோதயாத்

ஓம் திருமழிசையாழ்வராய வித்மஹே
தத்துவ புருஷாய தீமஹி
தந்நோ சிவாக்யை சித்த ப்ரசோதயாத்

ஸ்ரீகருவூரார் சித்தர் காயத்ரி

ஓம் ராஜமூர்த்தியாய வித்மஹே
சவுபாக்ய ரத்னாய தீமஹி
தந்நோ வாதகாயை கருவூர் சித்த ப்ரசோதயாத்

ஸ்ரீ தன்வந்திரி காயத்ரி

ஓம் ஆதி வைத்யாய வித்மஹே
ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி
தந்நோ தன்வந்திரீ ப்ரசோதயாத்