Thursday, November 26, 2009

ஏழுமலையானின் நிஜ முகம்....!

திருப்பதி ஏழுமலையானை, சர்வ அலங்காரனாய் பார்த்தவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, 1970 களில் எடுக்கப் பட்டதாக கருதப்படும் இந்த வீடியோ கிளிப்பில், ஏழுமலையான் எந்த அலங்காரமும் இல்லாமல் அபிடேகதாரியாய் காட்சியளிக்கிறார்.

திருமலை மூலவர் விக்கிரகம் குறித்த சர்ச்சைகளின் காரணமாய் அவர் முழு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்டப்படுகிறார் என்கிற சர்ச்சை பன்னெடுங் காலமாய் இருந்து வருகிறது. ஒரு பதிவர் கூட இது குறித்து ஒரு பதிவு எழுதியிருந்ததாய் நினைவு...






http://www.youtube.com/watch?v=ybLBma5KwEo&feature=related

Saturday, November 21, 2009

தனிமையின் இசை...!



இருள் தரும் அடர்த்தி

ஒற்றை வயலின் மறைக்கும் சோகம்

இறுக்கம் நெகிழ்த்தும் தாளகட்டு

நேர்த்தியான சித்திரம் அசைவதை போல....

தொலைத்துவிட்ட தருணங்களை நினைத்து

அழுகலாம்தான்...ம்ம்ம்ம்

பொறுங்கள்....

இன்னமொறு தடவை கேட்டுவிட்டு வருகிறேன்.




In The Mood of Love என்கிற ஆங்கிலபடத்தில் வரும் இசைகோர்வையிது

Monday, November 16, 2009

நான் ஆளான தாமரை ரிமிக்ஸ்....

This feature is powered by Dishant.com - Home of Indian Music


”நான் ஆளான தாமரை” இன்றைக்கும் கிறு கிறுவென கிறங்கிப் போகவைக்கும் வயாக்ரா பாடல். நினைத்த மாத்திரத்தில் கிளுகிளுப்பு கிணற்றுக்குள் தள்ளிவிடும் இந்த பாடலை, பாக்கிய ராஜ் தனது மகன் கதாநாயகனாய் நடிக்கும் படத்தில் ரீமிக்ஸ் செய்திருக்கிறார்.

கேட்டுப் பாருங்கள்...என்ன இருந்தாலும் நம்ம ஷோபனா....ஷோபனாதான்.....

Thursday, November 12, 2009

வார்த்தைகளின் வலி....



நிசப்பதமான சூழல், தனிமையில்....மிக நிதானமாய் கேட்டுப் பாருங்கள்,நான் ரொம்ப நாளாய் தேடிக் கொண்டிருந்த வசனங்கள் இவை....

வலிகளை, இழப்புகளை இதனை விட கவித்துவமாய் பட்டியலிட இயலாது.

ம்ம்ம்ம்ம்ம்.....

Gareth used to prefer funerals to weddings. He said it was easier to get enthusiastic about a ceremony one had an outside chance of eventually being involved in. In order to prepare this speech, I rang a few people, to get a general picture of how Gareth was regarded by those who met him. Fat seems to have been a word people most connected with him. Terribly rude also rang a lot of bells. So very fat and very rude seems to have been a stranger's viewpoint. On the other hand, some of you have been kind enough to ring me and let me know that you loved him, which I know he would have been thrilled to hear. You remember his fabulous hospitality, his strange experimental cooking. The recipe for "Duck à la Banana" fortunately goes with him to his grave. Most of all, you tell me of his enormous capacity for joy. When joyful, when joyful for highly vocal drunkenness. But I hope joyful is how you will remember him. Not stuck in a box in a church. Pick your favourite of his waistcoats and remember him that way. The most splendid, replete, big-hearted, weak-hearted as it turned out, and jolly bugger most of us ever met. As for me, you may ask how I will remember him, what I thought of him. Unfortunately there I run out of words. Perhaps you will forgive me if I turn from my own feelings to the words of another splendid bugger: W.H. Auden. This is actually what I want to say: "Stop all the clocks, cut off the telephone, Prevent the dog from barking with a juicy bonel, Silence the pianos and with muffled drum Bring out the coffin, let the mourners come. Let the aeroplanes circle, moaning overhead Scribbling on the sky the message 'He is Dead'. Put crepe bows 'round the white necks of the public doves, Let traffic policemen wear black, cotton gloves. He was my North, my South, my East, and West. My working week and my Sunday rest, My noon, my midnight, my talk, my song; I thought that love would last forever: I was wrong. The stars are not wanted now; put out every one, Pack up the moon and dismantle the sun, Pour away the ocean and sweep up the wood; For nothing now can ever come to any good."

Sunday, November 8, 2009

குரு...சில எண்ணங்களும், தொடுப்புகளும்...

பிறந்ததில் இருந்து முடிவு வரையில் வித்தை அவசியமாகிறது. வித்தை எல்லோருக்கும் அமையாது, அது தந்திரம். தந்திரம் சுயமாய் வாய்ப்பதுமில்லை. தந்திரத்தை அறிந்து கொள்ள முடியும். எவன் உணர்ந்து கொள்கிறானோ அவன் மட்டுமே நிலைக்கிறான், ஜெயிக்கிறான்.

உணர்தல் என்பது உணர்த்துதல் என்கிற ஒன்றினால் மட்டுமே சாத்தியமாகும்....சாத்தியமாகிறது. உணர்த்துபவனுக்கு என தனி வரையறை ஏதும் இல்லை. அது எவனாகவும், ஏன் எதுவாகவும் கூட இருக்கலாம். எவன், எது என்பதற்குள் சகலமும் அடங்கியிருக்கிறது.

உணர்த்துபவன் எங்கிருந்தும் குதித்து வந்தவன் இல்லை, அவன் ஒரு சங்கிலி தொடரின் நீட்சியே !....உணர்ந்து கொண்டவனே உணர்த்துபவன் ஆகிறான். என் வரையில் இவனே வித்தையின் மூலமும் முடிவுமாய் இருக்க முடியும்.

காலம், கடவுள், காரணி, சுற்றம், சூழல், நண்பன், எதிரி, காதலி, மனைவி, மகன்......இவையே உணர்த்துபவைகள்...... உணர்த்துபவர்கள்

இவற்றையே நான் குருவென நம்புகிறேன்....அழைக்கிறேன்....மதிக்கிறேன்....வழி படுகிறேன்.

வழிபடுதல் என்பது அவன் அல்லது அது உணர்த்திய வழி நிற்றல் என்பதேயாகும். வழிபடுதலையும் தொழுதலையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். தொழுதல் என்பது ஆராதனை மற்றும் அடிமையாதலின் எச்சம்.

இதையொட்டி சமீபத்தில் நான் படித்த ஒரு தொடுப்பினையும் படித்து பாருங்கள். திரு.பாலகுமாரனின் எண்ணங்கள் அவை....

http://balakumaranpesukirar.blogspot.com/2009/06/blog-post_21.html



Thursday, November 5, 2009

இஸ்லாம் - தமிழ் : ஒரு வரலாற்றுப் பார்வை -3

இஸ்லாம் - தமிழ் : ஒரு வரலாற்றுப் பார்வை -1

இஸ்லாம் - தமிழ் : ஒரு வரலாற்றுப் பார்வை -2

இஸ்லாமிய தமிழறிஞர்கள், தமிழுக்கு தந்த மற்றொரு கொடை நாமா வகை இலக்கியங்களாகும். ”நாமே” என்கிற பாரசீக மொழியின் தழுவலாகவே நாமா குறிக்கப் படுகிறது. இதற்கு ‘வரலாறு' என பொருள் படும்.

அருஞ்செயலாற்றிய இஸ்லாமிய பெரியார்களின் வரலாற்றினை தருவதே இவ்வகை இலக்கியத்தின் நோக்காய் இருந்தது. தமிழில் சுமார் பதினாறு நாமா இலக்கியங்கள் இருப்பதாய் தெரிகிறது. இவற்றுள் புகழ் பெற்ற சில நாமாக்களையும் அது தொடர்பான தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

நூறு நாமா

மிஃஹ்றாஜ் நாமா

இருஷாது நாமா

சங்கறாத்து நாமா


நூறு நாமா அல்லது நூர் நாமா :

பாரசீக மொழியில் 'இமாம் கஸ்ஸாலி' என்பாரால் இயற்றப்பட்ட நூலின் தழுவலே இந்த நூறு நாமா. இதை நூர் நாமா என்றே அழைத்திட வேண்டும். நூர் என்கிற பாரசீக சொல்லுகு ஒளி என பொருள்தரும்.

'தொங்கல்'* எனும் செய்யுள் வடிவில் அமைந்த இருநூறு பாக்களில், இறைவன் ஒளியால் உலகத்தை படைத்தான் என்பதை மனித இனத்தின் வரலாற்றுப் பார்வையில் விவரிக்கும் நூல் இது. இதை இயற்றியவர் காயல் பட்டினத்தைச் சேர்ந்த செய்யது அஹமது மரைக்காயர் என்பார் ஆவார்.

மிஃஹறாஜ் நாமா

அய்யம்பேட்டை மதாறு சாஹிபு புலவரால் இயற்றப் பட்ட இந்த நூல் நபிகள் நாயகமவர்கள் வானவர்கோன் ஜிஃப்ரீல்(அலை) அவர்கள் துனையுடன் விண்ணேற்றம் பெற்று இறைச் சந்நிதானம் அடைந்து மீண்ட வரலாற்றினை விவரிக்கிறது.இஸ்லாமியர்களின் ஐம்பெருங் கடமைகளை பற்றியும் இந்நூல் விவரிக்கிறது.

இருஷாது நாமா

தன்னை வணங்குவதற்கென்றே இறைவன் மனிதனை படைத்தான் என்கிற மரபு இஸ்லாத்தில் உண்டு. இதற்கு மாறாக இறைச்சிந்தனை இல்லாது, ஒழுக்கநெறி தவறி இம்மையில் வாழ்வோருக்கு மறுமையில் இறைவன் சந்நிதானத்தில் எத்தகைய தண்டனைகளை தருகிறான் என்பதை விளக்கிடும் நூல்தான் இருஷாது நாமா.

காயல் ஷமூனா லெப்பை எனப்படும் ஷாமு நைனா லெப்பை என்பாரால் இயற்றப் பட்டது இந்த நூல். மனித குல மேன்மைக்கு தொழுகை எத்தனை அவசியமானது என்பதை வலியுறுத்தும் அருமையான நூல் இது. 'இர்ஷாத்' என்கிற அரபி நூலின் தழுவலே இருஷாது நாமா.

சக்கறாத்து நாமா

நாமா வகை இலக்கியங்களுள் மிகவும் புகழ் பெற்றது சக்கறாத்து நாமாவாகும்.பேட்டை ஆம்பூர் அப்துல் காதிர் சாஹிபு அவர்களால் இயற்றப் பட்டது இந்த நூல். நூறு பாக்களை உள்ளடக்கிய இந்த நூல் பெரும்பாலும் 'தொங்கல்'* எனப்படும் செய்யுள் வடிவில் அமைந்திருந்தாலும் ஆங்காங்கே வென்பாக்களும் இடம் பெற்றிருக்கிறது.

மரணம் என்பது மனிதகுலம் உட்பட எந்த ஒரு உயிரினமும் தவிர்க்க இயலாதது. மரணத்தின் அருகாமையில் மனிதன் அனுபவிக்கும் வலி மற்றும் வேதனை தொடர்பான அனுபவங்களையும், அவற்றில் இருந்து விடுபட தேவையான இறைச்சிந்தனை மற்றும் விவரித்துக் கூறும் நூல் இது.

* அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தையே இஸ்லாமிய தமிழ் அறிஞர்கள் ”தொங்கல்” என வழங்குவர்

Wednesday, November 4, 2009

கண்டுக்கிட்டதும்....லூஸ்ல விட்டதும்....

என்னவோ சுய சரிதை எழுதற மாதிரி ஆளாளுக்கு மாய்ஞ்சு மாய்ஞ்சு இந்த தொடரை எல்லாரும் எழுதறாங்க! .....அட! நம்மளையும் ஆராச்சும் கூப்டுவாய்ங்களோ மாட்டாய்ங்களோன்னு யோசிச்சிட்டு இருந்தப்ப, ஜீவன் கூப்டுட்டார்.

சரி, நம்மளும் கலந்து கட்டி அடிப்போம்னு லிஸ்ட் போட்ருக்கேன், பார்த்துட்டு சொல்லுங்க....

பிடிச்ச அரசியல் தலைவர் :
விளாதிமீர் இலியிச் லெனின்....

பிடிக்காத தலைவர் :
புர்ச்சி தலைவி

பிடித்த நடிகர் (நல்லா கவனிக்கனும்...நடிகர்!)
நாகேஷ்

பிடிக்காத நடிகர்
ஜெய் ஆகாஷ்

பிடித்த நடிகை...
யாரைன்னு சொல்றது...ஹி...ஹி..

பிடிக்காத நடிகை...
பரவை முனியம்மா

பிடித்த நகைச்சுவை நடிகர்...
டனால் தங்கவேலு

பிடிக்காத நகைச்சுவை நடிகர்...
விவேக்

பிடித்த ஆண் பாடகர்....
டி.எம்.எஸ், எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன்

பிடிக்காத ஆண் பாடகர்....
பெண்மையின் நளினம் கூடிய குரலுடனான பாடகர்கள்...(இன்னிக்கு பாதி பயபுள்ளைக அப்படித்தான் பாடுது...ம்ம்ம்ம்)

பிடித்த பெண் பாடகி....
சுசீலா, ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி

பிடிக்காத பெண் பாடகி
அனுராதா ஸ்ரீராம்

பிடித்த் இசையமைப்பாளர்...
மெல்லிசை மன்னர், அந்தக்காலத்து இசைஞானி

பிடிக்காத இசையமைப்பாளர்...
சங்கர் கனேஷ்

பிடித்த பதிவர்கள்...
எல்லா பெண் பதிவர்களும்...

பிடிக்காத பதிவர்கள்...
என்னைத் தவிர்த்த எல்லா ஆண் பதிவர்களும்....

பிடித்த கவிஞர்
காட்டாறு....(யாருன்னு கேட்ராதீங்க...அவுக மனசு கஷ்ட்டமாயிரும்)

பிடிக்காத கவிஞர்கள்
என்பதுகளில் இளையராசாவின் உச்சத்தில் அவரின் மெட்டுக்களுக்கு வார்த்தை நிரப்பிய எழுத்து யாவாரிகள்....(மானே...தேனே கவிஞர்கள்)

பிடிச்ச எளுத்தாளர்...(!)
வேற யாரு நாந்தேன்...

பிடிக்காத எளுத்தாளர் ...(!)
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அதுவும் எனக்கே அளிக்கப் படுகிறது...!

அடுத்து அழைக்க நினைக்கும் பதிவர்கள்...

போதும் இத்தோட நிறுத்திக்குவோம்....!