Monday, July 5, 2010

ஒரு பின்னூட்ட பதிவு...

பதிவர் மங்களூர் சிவா அவர்களின் பதிவுக்கு எதிர்வினையாற்றி திருவாளர் செந்தழல் ரவி அவர்களின் பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம்....

பின்னூட்டம் வெளியிடப் படுமா என தெரியாத சூழலில் எனது பதிவில் அந்த பின்னூட்டத்தை பதிந்து வைப்பது அவசியம் என நினைக்கிறேன்...வரலாறு முக்கியமில்லையா! :)


//எங்கள் வீட்டு பெண்ணை அவதூறு செய்து எழுதியுள்ள இந்த பதிவுக்கு எதிர்வினை இது.//

சமீப நாட்களில் கிருபா நந்தினி மற்றும் தோழி என்கிற பெண்பதிவர்களை விமர்சிக்கும் போது எந்த மாதிரியான வார்த்தையாடல்களை உங்கள் பதிவில் பயன் படுத்தி இருந்தீர்கள் என்பதை உங்களின் சுயபரிசோதனைக்கே விட்டு விடுகிறேன்.....

திருவாளர் பைத்தியக்காரன் எழுதிய பதிவு, திருமதி சந்தன முல்லை அவர்களின் மேலான பார்வைக்கு அனுப்ப பட்ட பின்னரே, மகாகனம் பொருந்திய வினவு அவர்களின் பதிவில் வெளியிடப் பட்டது என்பதை சம்பந்தப் பட்டவர்கள் பதிந்திருக்கும் சூழலில்....

மங்களூர் சிவா மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை நிரூபிக்கும் அல்லது மறுக்கும் தார்மீக உரிமை திருவாளர் பைத்தியக்காரனுக்கும், திருமதி சந்தனமுல்லைக்கும், மகாகனம் பொருந்திய வினவுக்கும்தான் இருக்கிறது....இதில் நீங்கள் எங்கே வருகிறீர்கள் என புரியவில்லை.

மங்களூர் சிவாவின் பதிவிற்கு மறுப்பு சொல்ல வேண்டியது திருவாளர் பைத்தியக்காரனும், திருமதி சந்தன முல்லையும், மகாகனம் பொருந்திய வினவும்தானே தவிர நீங்கள் இல்லை.....

திருமதி.சந்தனமுல்லை தனது தனித்துவம் பாதுகாக்கப் பட வேண்டுமெனவும், தனக்காக எவரும் உள் நுழைவதை அவர் விரும்பவில்லை என, தனது அருமை கணவருக்கே தடை போட்ட தன்னம்பிக்கை மற்றும் ஆளுமையை நீங்கள் மதித்திருக்க வேண்டும்.

இந்த பதிவை இடுவதற்கு முன்னர் அவரிடம் அனுமதி கேட்டிருப்பீர்களேயானால் நீங்கள் உஙகள் வீட்டு பெண்களையும் அவர்களின் உணர்வுகளையும் மதிப்பவராக எடுத்து கொண்டிருக்கலாம். ஒரு வேளை நீங்கள் கேட்டு திருமதி சந்தனமுல்லை உங்களுக்கு அனுமதி அளித்திருப்பாரேயானால் அவரின் ஆளுமை மற்றும் தன்னம்பிக்கை மீதான மரியாதை நொறுங்கிப் போய்விடுகிறது.

மங்களூர் சிவாவை கடித்துக் குதறுவதாக நினைத்து நீங்கள் அசிங்கப் படுத்தியிருப்பது உஙகள் வீட்டுப் பெண்ணைத்தான், மீண்டும் ஒரு தடவை செந்தழல் ஒரு அவசர கருத்தாளர் என்பதை நிருவியிருக்கிறீர்கள்....


.

Sunday, July 4, 2010

வாக்கா...வாக்கா....

உலக கோப்பை கால்பந்து இறுதி கட்டத்திற்கு வந்து விட்ட நிலையில், நான் கொஞ்சம் எதிர்பாராத அணிகள் எல்லாம் அரை இறுதிக்குள் வந்து விட்டன. விடிய விடிய முழித்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம். நான்கில் மூன்று ஐரோப்பிய அணிகள்....காலாலே கவிதை எழுதிய தென் அமெரிக்க அணிகள் இல்லாத நிலையில் இனி கோப்பை ஸ்பெயினுக்கு போனால் சந்தோஷப் படுவேன்.

ஜெர்மனி வீரர்கள் நிச்சயம் பேயாட்டம் ஆடுகிறார்கள்....அர்ஜெண்டினா பரிதாபமாய் சரணடைந்தது. சமீபத்தில் ரொம்பவே வருத்தப் பட்ட தருணம் அது!

ஊதித் தொலைக்கிறேனென ரசிகர்கள் ஊதிய ஊதல் சத்தம் நமக்கு காது கிழிகிறது, எப்படித்தான் விளையாடுகிறார்களோ?.

வீரர்களுக்கு இனையாக டிவி கேமராக்களின் கவனிப்பை பெற்றவர் மரடோனா....உணர்ச்சி பிழம்பாய் நவரசங்களையும் காட்டினார்.எனக்கு அடிக்கடி நம்ம டி.ஆர் நினைவு வந்து தொலைத்தது. எங்க அம்மா மரடோனா பத்தி சொன்ன ஒரு கமெண்ட் இந்த இடத்தில் பதிந்து வைக்கனும்....அவங்க சொன்னது

“இவன் ஏண்டா பந்து மாதிரி இங்கயும் அங்கயும் உருண்டுட்டு இருக்கான் ”

தென் ஆப்ரிக்கா நிஜமாகவே அசத்தி விட்டார்கள் , குளறு படிகள் இல்லாத உலக கோப்பையாக இது இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். தீவிரவாத அச்சுறுத்தல் இருந்தாலும், மைதானத்துக்குள் பெரிதாக காவலர்களையோ அல்லது அதிரடி படையினரையோ காண முடியவில்லை....

அழகான பெண் ரசிகைகளை காணமுடியவில்லை அல்லது காட்ட வில்லை....

இந்த குறையை தீர்க்க ஷக்கீராவின் வாக்கா வாக்கா....கீழே,

மைக்கேல் ஜாக்சனுக்கு பிறகு ஒரு அதீத அதிர்வு இந்த பெண்ணிடம் இருக்கிறது...அதிர்வுன்ன உடனே ஏடா கூடமா எதையாவது பார்த்துட்டு இருக்காதீங்க....ஹி..ஹி....நான் சொல்ல வந்தது எனர்ஜி லெவல்.

காமரூனை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சேர்ந்து உருவாக்கிய பாடல்தான் இது, 1986 களில் Golden sounds என்ற் குழுவின் பாடலாக இதை வெளியிட்டிருந்தனர்.இரண்டாம் உலகபோரில் கலந்து கொண்ட ஆப்ரிக்க வீரர்களின் நினைவை போற்றும் இந்த பாடலை ஷக்கீரா உலககோப்பை கால்பந்துக்கு பிரபலமாக்கி விட்டார்.....ஆனால் இந்த பாடல் உலக கோப்பைக்கு எந்த வகையிலும் பொருந்தாது என்கிற கருத்துக்களுக்கும் பஞ்சமில்லை...

வாக்கா வாக்கா...ன்னா ”கடமையை செய்”...ன்னு அர்த்தம் வரும்

முதல்ல ஒரிஜினல் அப்புறம் ஷக்கீரா....பார்த்துட்டு சொல்லுங்க எது டாப்புன்னு....

ஒரிஜினல்...




இது கொலம்பிய குத்துவிளக்கு ஷக்கீரா பாடினது....