Thursday, February 11, 2010

இனியும் எழுதுவேன். . . .

அநே(னே)கமாய் தினமும் பதிவெழுதும் தமிழ் பதிவன் நானாகத்தான் இருக்க முடியும்.ஆனால் இந்த பதிவில் எழுதாததன் சூன்யம் நிரம்பிக் கிடக்கிறது..வாசிப்புக்கு எழுதியதை தாண்டி, வசீகர எழுத்தின் நுட்பம் பழகவே இந்த பதிவு என்கிற குறிக்கோள் இப்போது தூசியும் துருவும் பிடித்து போய் கிடக்கிறது.

நான் தினமும் எழுதுகிற எழுத்தில் உயிர் இல்லையென்பது இப்போதுதான் உறைத்திருக்கிறது. கலைத்துப் போட்ட சில வாக்கியங்களை முன்னும் பின்னும் நகர்த்தி அடுக்குவதைப் போலத்தானிருக்கிறது அந்த நுட்ப பதிவுகள். ஆயிரம் பேருக்கும் குறையாமல் வாசிக்கிற நிர்பந்தமும், கிடைத்திருக்கிற ஒளிவட்டத்தை தக்கவைக்கும் பேராசையாலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்....அங்கே!

தொலைந்து போன நாட்களை நினைத்துப் புலம்புக்கொண்டிருக்கிற நேரத்தில் எதையாவது எழுதித் துவக்குவோம் என்றே இந்த பதிவினை மீள ஆரம்பித்திருக்கிறேன். தமிழ் பதிவுலகம் நிறையவே மாறிவிட்டது.....சுண்டைக்காய் முதல் சுடலைமாடசாமி வரை பிரித்து மேய்கிறார்கள்.

தமிழ்மணம் பக்கம் போய் மாதக் கணக்குகள் ஆகி விட்டது. மதியாதார் தலைவாசல். . . .

விண்ணை தாண்டி வருவாயா !, கௌதம் வாசுதேவன் மேனனின் படம். எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கின்றன ரஹ்மானின் இசை. . . .இதில் எனக்கொரு நெருடல். Pink Floyd ன் Wish you were here... பாடலின் படிமத்தில் ஒத்தியெடுத்தாற் போல ஒரு பாட்டை ரஹ்மான் தந்திருக்கிறார். கீழே இரண்டு பாடல்களையும் தந்திருக்கிறேன்...நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

WISH U WERE HERE...


நம்ம ரஹ்மானின் ஆரோமளே...

இதை ஈயடிச்சான் காப்பி என்று சொல்ல முடியாவிட்டாலும், பாதிப்புகள் இருப்பதை மறைக்க முடியாது. என் மாதிரியான ஆட்களே கண்டு பிடித்து விட முடிகிற அபத்தம். ரகுமானுக்கே வெளிச்சம். . . .

எல்லோரும் ட்விட்டர்..ட்விட்டர் என உருகி மருகிக் கொண்டிருந்த போது, பஃப்ளிக் டாய்லெட் சுவரில் எழுதுகிற சாமாச்சாரமாய் நினைத்து, பெரிதாய் ஆர்வம் இல்லாமல் இருந்தேன். சமீபத்தில் யாகூ சாட்டில் மல்லுக் கட்டிக் கொண்டிருப்பதற்கு மாற்றாய் இருக்கட்டுமென விட்டரின் பாதம் சரண் புகுந்தேன்.

இங்கே டவுசரை கழட்டும் விதமாய் இல்லாமல், மெலிதான சிரிப்புகளை தேக்கியவாறே நிமிடங்கள் நகர்ந்து போவதும் சுகமாய்த்தான் இருக்கிறது. டவுசருக்கும் அங்க ஒரு ஐடி கிரியேட் பண்ணியாச்சுல்ல....

இனி அதுலயும் எழுதுவேன். . . .













4 comments:

  1. அடிக்கடி எழுதுங்க...

    நுட்ப பதிவுகள் எப்படி இருக்கனுமோ அப்படி இருக்கு..ஆனா அதை மட்டுமே எழுதீட்டு இருந்தா அப்புறம் எங்களுக்கு எப்பவும் கிளாஸ் ரூம் ல இருக்குற மாதிரி இருக்கும்...கொஞ்சம் 2 வருஷம் ஃப்ளேஷ் பேக் போயிட்டு வந்து எழுதுங்க... பழைய படி உயிர் வரும்..:)

    ReplyDelete
  2. ///நான் தினமும் எழுதுகிற எழுத்தில் உயிர் இல்லையென்பது இப்போதுதான் உறைத்திருக்கிறது. கலைத்துப் போட்ட சில வாக்கியங்களை முன்னும் பின்னும் நகர்த்தி அடுக்குவதைப் போலத்தானிருக்கிறது அந்த நுட்ப பதிவுகள்.///

    இப்படி சொல்லுவது உங்கள் பெருந்தன்மையால் இருக்கலாம்..! ஆனால்..? உங்களாலும் உங்கள் பதிவுகளாலும் என்னை போன்ற எத்தனையோபேர் அர்த்தமுள்ளவர்களாக மாறி இருக்கிறார்கள்...!என்பதே உண்மை...!

    ReplyDelete
  3. ///தொலைந்து போன நாட்களை நினைத்துப் புலம்புக்கொண்டிருக்கிற நேரத்தில் எதையாவது எழுதித் துவக்குவோம் என்றே இந்த பதிவினை மீள ஆரம்பித்திருக்கிறேன்.///

    உங்கள் பழைய பதிவுகளை சேமித்து வைத்து மிகவும் ரசித்து படித்து இருக்கின்றேன்
    மீண்டும் அப்படிப்பட்ட பதிவுகளை காண ஆவல்...!

    ReplyDelete
  4. ///தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்....அங்கே!///


    எங்கேன்னு சொல்லிடுங்களேன்....! ;;)

    ReplyDelete