Tuesday, March 16, 2010

சவுக்குக்கு ஒரு சவுக்கு !

பதிவுகள் தர்ற சுதந்திர உற்சாகத்துல தமிழ் பதிவுலகில் நாளாந்தம் கருத்து வெந்த சாமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சொல்லி வைத்தாற் போல இவர்கள் அனைவரும் அப்பழுக்கற்ற இருபத்தி நாலு கேரட் சொக்க கொள்கைவாதிகள். மயிர் நீத்தால் உயிர் நீக்கும் தன்மானத்தவர்கள்.ஆரம்பத்தில் இவர்களின் கொனஷ்ட்டைகள் எரிச்சலாய் இருந்தாலும் நாளடைவில் காமெடி பீஸாய் கருதி கடந்து போய் கொண்டிருந்தேன்.

இன்றைக்கு ஒரு திரட்டியில் சவுக்கு என்பாரின் ஒரு பதிவினை காணக் கிடைத்தது. பதிவின் தலைப்பு ”கருணாநிதி பேசுவதை கேளுங்கள் முட்டாள்களே…”.

அடங்கொய்யால! வாசகர்களை கவர என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று அவரின் பதிவில் ஊடுருவினேன்.காவல்துறை மூன்று போராட்டங்களுக்கு அனுமதி தரவில்லையாம், கருணாநிதி பிரியாணி பொட்டலம் தந்தாராம்.ஹிண்டு ராம் ஹிந்தி பாட்டு போடறதா சொன்னாராம்.அதுக்கு, ஹிந்தி பாட்டுக்கு மட்டும், நாட்டுக்கு வேணாம்னு கருணாநிதி சொன்னாராம். அப்புறம் கருணாநிதியை வசைமாறி பொழிந்து முடித்திருக்கிறார் இந்த கொள்கைத் தங்கம்.

காவல்துறை அனுமதி மறுத்தா தடையை மீறின்னு சொல்லி போட்டோவுக்கு போஸ் குடுத்து படங்காட்டுவாங்களே...அதெல்லாம் இவருக்கு தெரியாது போல. . . ..

கருணாநிதியை வசைபாடும் இவர்கள் கண்ணுக்கு செயலலிதா என்றைக்குமே தெரியமாட்டார், இது இம்மாதிரியான ஆசாமிகளிடம் காணக்கிடைக்கும் ஆச்சர்யமான ஒற்றுமை. அந்த அம்மாவை ”ஈழத்தாய்” ன்னு சொல்லி தனியா சந்தோசப் படுவாகளோ என்னவோ. ஆனால் கொழுத்த திராவிட குஞ்சுகளாய் காட்டிக் கொள்ள பார்ப்பனீயம் வெங்காயம்னு வசதியா பேசீருவாங்க....

தமிழக மக்கள் உரிமை கழகம் என தன் பதிவுக்கு பெயர் வைத்திருக்கிறார். தமிழர் உரிமைக்காக இவர் என்னதான் எழுதியிருக்கிறார் என பதிவு முழுவதையும் மேய்ந்தால் அதில் பெரும்பாலும் கருணாநிதியை திட்டித் தீர்க்கும் பதிவுகள்தான் . அ.இ.அ.தி.மு.க வின் தீவிர விசுவாசியாக இருப்பாரோ என்கிற சந்தேகமே வந்து விட்டது எனக்கு....அம்மா மட்டும் இந்த பதிவினை பார்த்தால் சவுக்குக்கு பட்டு குஞ்சலம் கட்டினாலும் கட்டுவார்.....அத்தனை காட்டமாக கருணாநிதியை விமர்சித்திருக்கிறார்.

பதிவின் மேலே பிரபாகரனின் படம் வேறு. . . . ஈழத்தமிழ் பதிவர்களை குறிவைத்துப் போட்டிருக்கலாம். அதற்கு பதிவின் தலைப்பை தமிழர் உரிமை கழகம் என்றாவது வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்தால் எல்லா பதிவுகளிலும் கருணாநிதியை திட்ட முடியாதே என்பதற்காக தமிழகத்தை சேர்த்திருப்பார் போலும்.

தன்னை புத்திசாலியாக அவர் கருதிக் கொள்ளட்டும், அதற்காக வாசகனை முட்டாள் எனச் சொல்லும் அதிகாரத்தை இவருக்கு யார் தந்தது?, அந்த கோவத்தின் வெளிப்பாடுதான் இந்த பதிவு!. . . . அப்புறம் வரும் போது அவர் பதிவில் மூன்று பின்னூட்டங்கள் போட்டேன். அதில் ஒன்றை அவர் வெளியிடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை....எனவே அந்த பின்னூட்டம் கீழே!

தமிழக மக்கள் உரிமை கழகம் ன்னு பேரு வச்சிட்டு பிரபாகரன் படம் போட்ருக்கீங்க....

அந்த இடத்துல உங்க படத்த போடுங்க...எத்தனை நாளைக்குத்தான் அடுத்தவன் காலையே நக்கீட்டு இருக்கறது. நமக்கு நாமதான் தலைவர்னு சொல்ற தன்னம்பிக்கை வரனும் அதான் உரிமைக்கான முதல் படி. . .

பெரியாரை பாருங்க எவனை கட்டீட்டு அழுதாரு...அவருதான்யா சிங்கம்....யோசிங்க பாஸ்!

சவுக்கால அடிச்ச மாதிரி இருக்கேன்னு பின்னூட்டத்த பப்ளிஷ் பண்ணாம விட்றாதீக!

6 comments:

 1. ஏனுங்க டவுசர் பாண்டி தம்பி,

  எம்பேரு கூட கந்தசாமிதானுங்க. என்னைப்பற்றி ஏதோ சொல்றாப்ல இருக்குதுங்க. நானொரு அப்பாவி ஜீவனுங்க. யார் வம்பு தும்புக்கும் போகமாட்டேனுங்க.

  உங்க பதிவுல சொல்லீருக்கிற கந்தசாமி நானு இல்லீங்களே? சொல்லாட்டா நாண்டுட்டு செத்துப்போய்டுவனுங்க! உங்களைத்தான் பாவம் புடிச்சுக்குமுங்க.

  ReplyDelete
 2. ஆஹா...

  கந்தசாமி அய்யா...உங்களுக்காவாச்சும் அந்த பேர மாத்தீரனும்னு முடிவு பண்ணீட்டேன். ஒரு ஃப்ளோ ல வந்துருச்சு அந்த பேரு, மன்னிச்சிருங்க சாமீ :)

  பெரியவங்க தப்பா எடுத்துக்காதீங்க.

  ReplyDelete
 3. நல்ல விமர்சனம் நண்பரே. வாழ்த்துக்கள். இன்று மாலை விரிவான பின்னூட்டம் இடுகிறேன்.

  ReplyDelete
 4. //தன்னை புத்திசாலியாக அவர் கருதிக் கொள்ளட்டும், அதற்காக வாசகனை முட்டாள் எனச் சொல்லும் அதிகாரத்தை இவருக்கு யார் தந்தது?// அதானே!

  ReplyDelete
 5. அதானே

  எங்கடா காணோம்னு பார்த்தேன்

  ReplyDelete
 6. //தன்னை புத்திசாலியாக அவர் கருதிக் கொள்ளட்டும், அதற்காக வாசகனை முட்டாள் எனச் சொல்லும் அதிகாரத்தை இவருக்கு யார் தந்தது?//

  அதே...!

  ReplyDelete