Thursday, May 6, 2010

நேற்றிரவு கடவுளிடம் பேசிக் கொண்டிருந்த போது....

எழுதாமலே இருப்பது கூட சுகமாய்த்தான் இருக்கிறது. மெனெக்கெட்டு எழுதுவதை விட தோன்றும் போது எழுதுவதின் பின்னால் எப்போதும் ஒரு நேர்மை இருக்கும்.

எழுதாவிட்டாலும் கூட மெனக்கெட்டு பதிவுலகின் எல்லா எல்லைகளிலும் வாசிக்கிறேன், வாசித்த பின்னர் ஒரு விதமான அயற்சியே எஞ்சுகிறது.புகழ் வெளிச்சம் எனக்கு அலுத்துவிட்டதால் கூட அப்படி தோன்றலாம்.

தன்னை மட்டுமே முன்னிறுத்தி எழுதும் எழுத்துக்களை அதிக நாட்களுக்கு எழுத முடியாது. சரக்கு தீர்ந்த பின்னால் பொய் சொல்லியோ, மிகையாகவோ எழுதலாம்...ஒரு கட்டத்தில் இந்த மாதிரி எழுத்தும் களைப்பையே தரும். சொந்த அனுபவம்....ம்ம்ம்ம்ம்

மயங்கும் கண்ணை பாராமல்
கலங்கும் நெஞ்சை கேளாமல்
பிரிந்து செல்ல எண்ணாதே
என் கண்ணீர் பேசும் மறவாதே.....

இப்போது கேட்டுக் கொண்டிருக்கும் வரிகள் இவை.....நானே வருவேன் என்கிற அமரத்துவம் வாய்ந்த பாடலின் வரிகள்....நாயகியின் சோகம் காதலிக்காதவனையும் காதலிக்க வைக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் Jack Nicholson நடித்த Something's Gotta Give படத்தினை பார்த்தேன், எத்தனையாவது முறையாக பார்க்கிறேன் என்று நினைவில்லை, ஆனால் எத்தனை முறை பார்த்தாலும் புதிதாய் தெரியும் படம் இது....விமர்சனமெல்லாம் எழுதி உங்களை கலவரப் படுத்தப் போவதில்லை.

கொஞ்சம் விவகாரமான கதை, அறுபத்தி மூன்று வயது ’ப்ளேபாய்’ ஜேக் நிக்கல்சன் தனது 20 வயது காதலியின் அம்மாவை எக்குத் தப்பான ஒரு சூழ்நிலையில் சந்திக்கிறார், சில பல தொடர் நிகழ்வுகளில் காதலியின் அம்மாவை கவர்கிறார். இந்த காதலுக்கு குறுக்கே கொஞ்ச வயசு டாக்டர் ஒருவர் வேறு வருகிறார். இந்த காதல் என்ன ஆனது என்பதை கலந்து கட்டி சுவாரசியமாய் சொல்லியிருக்கின்றனர். முடிந்தால் பார்த்து விடுங்கள்.....

காதல் என்பது கத்தி மேல் நடப்பது மாதிரியானது, தவறான ஒரு தப்படி கூட எல்லா சந்தோஷங்களையும் சாப்பிட்டு விடும். இதைப் பற்றி தனியாய் நீளமாய் ஒரு பதிவு எழுத வேண்டுமென ஐந்தாறு வருடஙக்ளாய் நினைத்து மட்டும் கொண்டிருக்கிறேன்.

இலங்கைப் பிரச்சினைகளைப் பற்றி எதுவும் எழுதுவதில்லை என தீர்மானமாய் இருந்தேன், ஆனால் சமீபத்தில் பிரபாகரனின் மூத்த சகோதரரின் பேட்டியினை படித்த பின்னர் தோன்றியது இதுதான்..... குழப்பமான ஐம்பதுகளில் இருக்கும் ஒரு மனிதனின் வாக்குமூலம் மாதிரித்தான் இருந்தது.கடவுளை நம்புகிறார், தம்பியை நேதாஜிக்கு இனையாக அடிக்கடி சொல்லியிருக்கிறார். அலைக்கழிக்கப் படும் தனது தாயாரைக் குறித்த துடிப்பு எதையும் கானோம்.ம்ம்ம்ம்ம்ம்

இத்தனை தூரம் எழுதிய பின்னர் என்ன தலைப்பு வைப்பது என புரியவில்லை. எதற்கும் “நேற்றிரவு கடவுளிடம் பேசிக் கொண்டிருந்த போது” என வைத்து விடுகிறேன்.

எனது மரியாதைக்குறிய தோழியும், எனது அருமை தெலுங்கு வாத்தியாருமான(நாளை பின்னே இதைப் படிச்சா சந்தோஷப் படுவார் :)) அந்த பதிவர் உடல் நலம் பாதிக்கப் பட்டிருக்கிறார். விரைவில் நலம் பெற வேண்டுகிறேன். நான் தெலுங்கு படித்த கதையினை அவர் விரைவில் நலம் பெற்று வந்து பதிவாய் இடவேண்டுமென எல்லாம் வல்ல மகர நெடுங்குழைக்காதனை வேண்டுகிறேன்.



2 comments:

  1. ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே மூச்சில் படிக்க வைக்கும் உங்க ஸ்டைல் பதிவு...! ;)

    ///காதல் என்பது கத்தி மேல் நடப்பது மாதிரியானது, தவறான ஒரு தப்படி கூட எல்லா சந்தோஷங்களையும் சாப்பிட்டு விடும். இதைப் பற்றி தனியாய் நீளமாய் ஒரு பதிவு எழுத வேண்டுமென ஐந்தாறு வருடஙக்ளாய் நினைத்து மட்டும் கொண்டிருக்கிறேன்.///

    எதிர்ர்ர்ர் பார்க்கிரோம்...! ( என்னமோ இருக்கு);)



    ///எனது மரியாதைக்குறிய தோழியும், எனது அருமை தெலுங்கு வாத்தியாருமான(நாளை பின்னே இதைப் படிச்சா சந்தோஷப் படுவார் :)) அந்த பதிவர் உடல் நலம் பாதிக்கப் பட்டிருக்கிறார். ///


    மேடம் விரைவில் நலம் பெற நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம்..!

    ReplyDelete
  2. //மகர நெடுங்குழைநாதனை வேண்டுகிறேன்//.

    ஐயா தெலுங்கு படிச்ச கதை எழுதுனா இந்த பேர் அளவுக்கு கூட பதிவு வராது...ஐயா படிக்க/தெரிஞ்சுக்க நினச்சது ஒரே வரி..அதை சமத்தா படிச்சுட்டார்...காதலை பத்தி சீக்கிரம் எழுதுங்க.ரொம்ப நாளா ஏமாத்திட்டு இருக்கீங்க

    ReplyDelete