Sunday, June 20, 2010

எழுத மேட்டர் இல்லை அதான்......!

எழுதி நாளாகிறது !

இதனால் யார் குடியும் கெட்டுப் போகவில்லை என்பதுதான் நல்ல செய்தி.

இடைக்காலத்தில் என்னவெல்லாமோ செய்து கொண்டிருந்தேன்.... ”கொலதெய்வம்” நமீதாவை ட்விட்டரில் தொட்டதை வரலாற்று சம்பவமாய் பதிந்து வைக்கலாம்.”இப்பல்லாம் நமீதாவோட அடிக்கடி பேசுறேன் பாஸ், ராத்திரி ஆனா அந்த புள்ள மச்சானுக்கு குட்நைட் சொல்லாம தூங்கறதே இல்லைன்னு இனி ட்விட்டர் புரியாதவனிடம் கதைவிடலாம்.....ம்ம்ம்ம்

சமீபத்தைய நர்சிம், முல்லை ”சதிராட்ட”த்தில் நானும் நர்சிம் பக்கமாய் நின்று எதிர் பதிவுகளில் எல்லாம் போய் கூவி வைத்தேன். இத்தனைக்கும் நர்சிம்மின் எழுத்துக்களையோ, முல்லையின் பதிவுகளையோ பெரிதாய் வாசித்ததில்லை. ஆனால் நர்சிம் தரப்பு நியாயங்கள் கலாச்சார போர்வையின் கீழே போட்டு மிதிக்கப் பட்டதாக நம்பினேன்....மற்றபடி இருவரைப் பற்றியும் எனக்கு பெரிதான அபிப்பிராயங்கள் இல்லை.

”பெரியார்” படத்திற்கு பெரியவர் இசையமைக்கச் சொல்லி கேட்டும் இசைஞானி மறுத்துவிட்ட வருத்தமே, செம்மொழி மாநாட்டு பாடல் வாய்ப்பில் ஓரம் கட்டப் பட்டாராம்.ஞானியால் புயலுக்கு வாய்ப்பு....நம்ப தகுந்த ஒருவர் சொன்ன சேதி இது....நான் நம்பி விட்டேன்!

சாரு நிவேதிதாவின் பதிவுகளை நெம்ப காலமாகவே வாசித்து வருகிறேன்...அருமையான பத்தி எழுத்தாளர் ஆனால் சமீப காலமாக மனுஷன் எழுத்துலக வடிவேலுவாய் சிரிக்க வைக்கிறார். அவர் போடும் ஜட்டியில் இருந்து , வீட்டு நாய் மூச்சா போன கதை வரை எழுதிவிட்டு அதை ஒலக இலக்கியமாய் ஜம்பமடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்போதெல்லாம் வாசகர் மெயில் என்கிற போர்வையில் அவரே கஷ்டப்பட்டு ஒளிவட்டம் ஏற்றுவது அபத்தமாய் இருக்கிறது. அவர் தளத்துக்குப் போனால் கவலை மறந்து சிரித்து விட்டு வர நான் கேரண்டி...சமீபத்தய காமெடி ஷேக்ஸ்பியரின் ஈ-மெயில் ஐடி அவரிடம் கிடைக்கலாம் என்பதாக ஒரு பில்ட்டப்!.

நண்பர் கொடுத்த நிறைய ஆங்கில பட டிவிடி க்களை கையில் வைத்துக் கொண்டு பார்க்க நேரமில்லாது அலைந்து கொண்டிருக்கிறேன்.... விமர்சிக்கிறேன் பேர்வழி என ஒவ்வொரு படத்தைப் பற்றியும் பதிவுபோட்டு உங்களை இம்சை படுத்தமாட்டேன் என்கிற உத்திரவாதத்தை மட்டும் இப்போதைக்கு தர முடியும்.

No comments:

Post a Comment