Wednesday, February 24, 2010

வாழ்த்த வயதுதான் வேண்டுமா ?

நேற்றைக்கு இங்கே திரும்பிய பக்கமெல்லாம் அம்மாவை வாழ்த்தி மண்ணிக்கவும் வணங்கி போஸ்ட்டர்கள், ப்ளக்ஸ். எல்லாம் அம்மாவுக்கு அறுபத்தி இரண்டு வயதான கொண்டாட்டம்தான்.அம்மாவை போற்றிய அதியற்புதமான ஆராதனைகள் மற்றும் ஸ்தோத்திரங்களுடன் கீழே, வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் என சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் போட்டிருந்தனர்.

இந்த எதுகை மோனை வாசகத்தை எந்த புண்ணியவான் உருவாக்கினாரோ தெரியவில்லை. ஈயடிச்சான் காப்பியாக அத்தனை பேரும் பயன்படுத்துகிறார்கள்.உண்மையில் ஒருவரை வாழ்த்த என்ன தகுதி வேண்டும் நெகிழ்ந்த மனதுதானே வேண்டும். வயதுக்கும், வாழ்த்துக்கும் எதேனும் தொடர்பு இருக்கிறதா.

ஒருவரை தினம்தோறும், எவரும் வாழ்த்திக் கொண்டே இருக்கப் போவதில்லை, அல்லது தினமும் அதற்கான காரண காரியங்களுக்கும் வாய்ப்பில்லை. அப்படி இருக்க ஏதோ ஒரு நாளில் வாழ்த்த வேண்டிய சந்தர்ப்பத்தில் கூட இவர்கள் வணங்குவதாய் போஸ்ட்டர் அடிப்பதன் மூலம், அன்றைக்கு மட்டும்தான் வணங்குவார்கள் மற்ற நாட்களில் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பது மாதிரியான கள்ளத்தனம் வந்து விடுகிறதல்லவா!

புத்தாண்டு மாதிரியான கொண்டாட்ட காலங்களில், வயதைப் பார்த்தா ஒவ்வொருவரும் வாழ்த்தும், வணக்கமும் சொல்லுகிறார்கள்.

திராவிட இயக்கத்தின் காக்காய் மற்றும் காலில் விழும் கலாச்சாரத்தில் அவமானகரமான எச்சமாகவே எனக்கு இந்த வாசகம் தோன்றுகிறது.

”அம்மா”விற்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

3 comments:

  1. பாண்டியை... நான் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  2. ///ஒருவரை வாழ்த்த என்ன தகுதி வேண்டும் நெகிழ்ந்த மனதுதானே வேண்டும். வயதுக்கும், வாழ்த்துக்கும் எதேனும் தொடர்பு இருக்கிறதா.//

    இதுதான் என் கருத்தும் ..!

    அடுத்து முதல்வராக அம்மாவுக்கு என் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  3. naanum paarthean....innum romba thamaaashaana vaasagam ellaam padichean..tutukudi la

    ReplyDelete