Sunday, November 8, 2009

குரு...சில எண்ணங்களும், தொடுப்புகளும்...

பிறந்ததில் இருந்து முடிவு வரையில் வித்தை அவசியமாகிறது. வித்தை எல்லோருக்கும் அமையாது, அது தந்திரம். தந்திரம் சுயமாய் வாய்ப்பதுமில்லை. தந்திரத்தை அறிந்து கொள்ள முடியும். எவன் உணர்ந்து கொள்கிறானோ அவன் மட்டுமே நிலைக்கிறான், ஜெயிக்கிறான்.

உணர்தல் என்பது உணர்த்துதல் என்கிற ஒன்றினால் மட்டுமே சாத்தியமாகும்....சாத்தியமாகிறது. உணர்த்துபவனுக்கு என தனி வரையறை ஏதும் இல்லை. அது எவனாகவும், ஏன் எதுவாகவும் கூட இருக்கலாம். எவன், எது என்பதற்குள் சகலமும் அடங்கியிருக்கிறது.

உணர்த்துபவன் எங்கிருந்தும் குதித்து வந்தவன் இல்லை, அவன் ஒரு சங்கிலி தொடரின் நீட்சியே !....உணர்ந்து கொண்டவனே உணர்த்துபவன் ஆகிறான். என் வரையில் இவனே வித்தையின் மூலமும் முடிவுமாய் இருக்க முடியும்.

காலம், கடவுள், காரணி, சுற்றம், சூழல், நண்பன், எதிரி, காதலி, மனைவி, மகன்......இவையே உணர்த்துபவைகள்...... உணர்த்துபவர்கள்

இவற்றையே நான் குருவென நம்புகிறேன்....அழைக்கிறேன்....மதிக்கிறேன்....வழி படுகிறேன்.

வழிபடுதல் என்பது அவன் அல்லது அது உணர்த்திய வழி நிற்றல் என்பதேயாகும். வழிபடுதலையும் தொழுதலையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். தொழுதல் என்பது ஆராதனை மற்றும் அடிமையாதலின் எச்சம்.

இதையொட்டி சமீபத்தில் நான் படித்த ஒரு தொடுப்பினையும் படித்து பாருங்கள். திரு.பாலகுமாரனின் எண்ணங்கள் அவை....

http://balakumaranpesukirar.blogspot.com/2009/06/blog-post_21.html



3 comments:

  1. எனக்கும் இதில் நம்பிக்கை இருக்கு...

    பாலகுமாரன் சொன்னது போல நமக்கே தெரியாமல் எது ஒன்று நமக்குள் ஒரு புதிய தெளிவையும்..மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றதோ..அதை உணர்ந்து அதன் படி நடப்பது கூட குரு வழிபாடு தான்

    ReplyDelete
  2. ஒருவரின் மனசாட்சியை விட வேறு எவரும், எதுவும் நன்மை/தீமைகளை பிரித்தறிந்து புத்திக்கு உணர்த்துவதில்லை. மற்ற காரணிகள் அனைத்தும் அதன் பின்னர்தான்

    ReplyDelete
  3. எனக்கு என்னுள் ஒரு குருவை காட்டியது ...!
    பாலகுமாரன் என்ற குருதான்..!

    அருமையான பதிவு...!
    இதுபோன்று இன்னும் எழுதுங்கள்...!

    ReplyDelete